About Us

எங்களைப் பற்றி – Thagavalthalam

வணக்கம்!
நான் தினேஷ், திருவண்ணாமலையைச் சேர்ந்தவன். வணிக மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன், தற்போது கரூரில் பிரபலமான வீட்டு ஜவுளித் துறையில் மூத்த தொழில்துறை பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு பிளாக்கிங் செய்வது ஒரு பொழுது போக்காகவும் மிகவும் பிடித்தமான ஒன்று, இதை நான் படித்து முடித்து விட்டு ஒரு மாத காலம் வேலை தேடி கொண்டிருக்கும் சமயத்தில் யூடுப் மூலம் கற்று கொண்டேன். எனக்கு சிறு வயதிலிருந்தே தமிழ் மீதான ஒரு ஈர்ப்பு, மூன்றாம் வகுப்பில் படிக்கும் பொழுது தமிழ் நன்றாக வாசித்தனால், எனக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்றும் அதை வைத்துள்ளேன் எப்பொழுதெல்லாம் வீட்டுக்கு செல்கிறேனோ அப்பொழுல்லாம் என் அலமாரியை திறந்து அதை பார்ப்பேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த நாள் நினைவுகள், அதானால் என்னவோ பத்தாம் வகுப்பில் தமிழில் நூற்றுக்கு 96 மதிப்பெண் பெற்றேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவல்களை ஆராய்ந்து, அதை எளிய முறையில் மக்களிடம் பகிர்வது என் வாழ்நாள் ஆர்வம். அதற்காகவே இந்த Thagavalthalam இணையதளத்தை உருவாக்கினேன்.

இந்த வலைத்தளத்தின் முக்கிய நோக்கம் –

  • தமிழ் வாசகர்களுக்கான பயனுள்ள தகவல்களை எளிமையாக வழங்குவது
  • அறிவு, கலாச்சாரம், தொழில், உடல்நலம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளை ஒரே இடத்தில் கொண்டுவருவது
  • தினசரி வாழ்க்கைக்குப் பயன்படும் நம்பத்தகுந்த தகவல் தளமாக செயல்படுவது

எங்கள் உள்ளடக்கம் என்ன?

  • தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்
  • ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் வாழ்க்கை முறை
  • தொழில் மற்றும் கல்வி தொடர்பான தகவல்கள்
  • டிஜிட்டல் உலகம் மற்றும் தொழில்நுட்பம்
  • புதிய வாய்ப்புகள் மற்றும் வருமான யோசனைகள்

எங்கள் குறிக்கோள்

Thagavalthalam இணையதளம், தமிழில் தகவல்களை தேடும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை தரும் அறிவுத் தளம் ஆக மாறுவதே எங்கள் குறிக்கோள். அறிவைப் பகிர்ந்து, வாசகர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களின் சாதனை.

👉 உங்களது ஆதரவும் கருத்துகளும் எங்களை மேலும் வளரச் செய்யும். தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்! கீழே எங்களுடைய சமூக வலைத்தளங்களில் இணைப்புகளை கொடுத்துள்ளேன் இணைந்து ஆதரவு தாருங்கள்.