இன்றைய உலகத்தில் உணவீன் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. வித விதமான உணவுகளை மக்கள் கண்டுபிடித்து சமைத்து உண்கிறார்களே தவிர ஆரோக்கியத்தின் மீதான அக்கறை குறைந்தது கொண்டே வருகிறது. இதன்,காரணத்தால் இதய நோய்கள், உடல் பருமன், மாறடைப்பு போன்ற உடல் நோய்கள் ஏற்படுகிறது. உடலில் நோய் ஏற்பட முதல் காரணம் உடல் பருமன் அதனால் உடலின் எடையை சரியான முறையில் பேணி பாதுகாத்து கொண்டாலே போதும் உடலில் நம்மிடம் நோய்கள் நெருங்காது. அந்த வகையில் இங்கு குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை உங்களுக்கு பரிந்துறைக்கிறேன். உங்கள் தகுந்த உணவை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை உட்கொண்டல் போதுமானது.
கீரை வகைகள்:

பொதுவாக கீரைகளில் அதிக அளவு நார் சத்துக்கள் உள்ளன. மற்றும் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. பொன்னாங்கண்ணி கீரை, வெந்தய கீரையில் கால்சியம் அதிகமாகவும், பசலை கீரையில் போட்டாசியம் அதிகமாகவும் உள்ளன. அது மட்டும் அன்றி, முருங்கை கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளன. இன்னும் பல்வேறு வகையான கீரை வகைகளில் சத்துக்கள் அதிகம்.
கீரையின் கலோரி 23 கலோரி / 100 கிராம்.
காலிப்லவர்
இவை மிக குறைந்த கலோரி உடைய வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, வைட்டமின் B12 மற்றும் மேகினிசியம் போன்ற ஓட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு இவை இவற்றின் கலோரி 25 கலோரி / 100 கிராம்.
வெள்ளரி

நீர் சத்துள்ள உணவுகளில் முதன்மையான உணவு வெள்ளரி காய். இவை உடலின் எடையை சரியான முறையில் பாதுக்காத்து உடல் பருமனை குறைக்கிறது.
ஃபெர்ரி பழ வகை

ஃபெர்ரி பழ வகைகளில் மிக குறைந்த கலோரிகள் உள்ளன. அதிகம் பைபர் நிறைந்த பழ வகை இது
சிட்ரஸ் பழ வகைகள்

சிட்ரஸ் பழ வகைகளான, ஆரஞ்சு, திராட்சை, லெமன் போன்ற பழங்களில் குறைந்த கலோரியும், வைட்டமின் சி யும் அதிகமாக உள்ளன.
இவ்வாறான உணவை உங்கள் உணவு தட்டில் அதிக அளவும் குறைந்த அளவாக சாதம் அல்லது மற்றவையை எடுத்து கொண்டால் உங்கள் உடல் எடையை சீராக பராமரிக்கலாம்.
கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணையில் அதிக அளவு கலோரி உணவு பட்டியலும், குறைந்த கலோரி பட்டியலும் பதிவிட்டுள்ளோம். தெரிந்து கொண்டு சரியான ஊட்டாச்சாத்து விகிததோடு உணவு உண்டு உடல் நலத்தை பேணி பாதுகாத்து கொள்ளுங்கள் நன்றி.
Low Calories Food List:
உணவுகள் | கலோரி / 100 கிராம் |
ஆப்பில் | 53 கலோரி |
பீட்ரூட் | 43 கலோரி |
திராட்சை | 42 கலோரி |
பப்பாளி | 42 கலோரி |
கேரட் | 41 கலோரி |
பீன்ஸ் | 31 கலோரி |
பேர்ரி | 33 கலோரி |
காலிபிலவர் | 25 கலோரி |
தர்பூசணி | 30 கலோரி |
பூசணி | 26 கலோரி |
கீரை | 23 கலோரி |
காளான் | 22 கலோரி |
தக்காளி | 18 கலோரி |
முள்ளங்கி | 16 கலோரி |
High Calories Foods in tamil List:
உணவுகள் | கலோரி / 100 கிராம் |
சூரை மீன் | 132 கலோரி |
அவகேடோ | 160 கலோரி |
கோழி | 239 கலோரி |
மாட்டிரைச்சி | 259 கலோரி |
சீஸ் பர்கர் | 303 கலோரி |
சீஸ் | 402 கலோரி |
வேர்க்கடலை | 567 கலோரி |
முந்திரி | 574 கலோரி |
மயோனெய்சு | 680 கலோரி |
வெண்ணெய் | 707 கலோரி |
இது போன்ற உடல் நலம் சார்ந்த குறிப்புகளுக்கு எங்களை பின் தொடர்க.